search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனக துர்க்கை அம்மன்"

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் விஜய வாடாவில் உள்ள கனக துர்க்கை அம்மனுக்கு ரூ.1.37 கோடி மதிப்புள்ள வைர மூக்குத்தியை காணிக்கையாக வழங்கி நேர்த்தி கடனை செலுத்தினார். #KChandrasekharRao
    நகரி:

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் விஜய வாடாவில் உள்ள பிரசித்து பெற்ற கனக துர்க்கை அம்மன் கோவிலுக்கு தனது குடும்பத்துடன் சென்றார்.

    அப்போது தனி தெலுங்கானா அமைந்தற்காக கனக துர்க்கை அம்மனுக்கு ரூ.1.37 கோடி மதிப்புள்ள வைர மூக்குத்தியை காணிக்கையாக வழங்கி நேர்த்தி கடனை செலுத்தினார். 11.290 கிராம் எடை கொண்ட இந்த வைர மூக்குத்தியில் 57 வைரக்கற்கள், நீலம், கெம்பு போன்ற விலை மதிப்புள்ள கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.



    தனி தெலுங்கானா மாநிலம் அமைந்ததையொட்டி முதல்வர் சந்திர சேகரராவ் திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.5.5 கோடி மதிப்பில் சாலிக்கிராம ஹாரம், திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு வைர மூக்குத்தி காணிக்கை வழங்கினார்.

    மேலும் வாரங்கல் பத்ரகாளி அம்மனுக்கு தங்க கிரீடம், குருவி பகுதியில் உள்ள வீரபத்ரசாமிக்கு தங்க மீசை ஆகியவை வழங்கி நேர்த்தி கடனை செலுத்தி உள்ளார். #KChandrasekharRao
    ×